உலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Mar 29, 2025 - 11:15 AM -

0

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) காலை 5:16 மணிக்கு (IST) 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS)தெரிவித்துள்ளது.

 

NCS-ன் படி, இந்த நிலநடுக்கம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.50 N மற்றும் தீர்க்கரேகை 71.12 E இல் பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் (NCS) தெரிவித்துள்ளது.

 

தேசிய நில அதிர்வு மையம் தனது X பக்கத்தில், "ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம், 29/03/2025 அன்று 05:16:00 IST மணிக்கு, அட்சரேகை: 36.50 N, தீர்க்கரேகை: 71.12 E, ஆழம்: 180 கி.மீ, இடம்: ஆப்கானிஸ்தான்" என்று குறிப்பிட்டுள்ளது.

 

உடனடியாக எந்த உயிரிழப்போ அல்லது பெரிய சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

ஏற்கனவே மார்ச் 27 ஆம் திகதியன்று, ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05