சினிமா
நடிகர் மனோஜ் இறப்பதற்கு முதல் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை!

Mar 29, 2025 - 01:15 PM -

0

நடிகர் மனோஜ் இறப்பதற்கு முதல் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை!

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மரணத்திற்கு உடல்நிலை முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அவர் மாரடைப்பால் மார்ச் 25 ஆம் திகதி மாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். மனோஜுக்கு வயது 48.


அவருக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள சிம்ஸ் வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) செய்யப்பட்டிருந்தது.


அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தாலும், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மனோஜ், பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனாவார். 1999ஆம் ஆண்டு "தாஜ் மஹால்" படத்தில் நடிகராக அறிமுகமான இவர், "சமுத்திரம்", "கடல் பூக்கள்", "ஈர நிலம்" போன்ற படங்களில் நடித்தவர்.


சமீபத்தில் "மார்கழி திங்கள்" என்ற படத்தை இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05