Mar 29, 2025 - 02:17 PM -
0
தேவேந்திரமுனையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரான பசிந்து தாரக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று (29) நடைபெற உள்ளன.
பசிந்து தாரக கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது தந்தை மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் அவரது தந்தை கரைக்குத் திரும்பும் வரை பசிந்துவின் இறுதிச் சடங்கை தாமதப்படுத்த உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, அவரது தந்தை இன்று தனது வீடு திரும்பியிருந்தார்.
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேவேந்திரமுனை, கபுகம்புர பகுதியில் உள்ள வீட்டொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பசிந்து தாரக மற்றும் யோமேஷ் நாதீஷான் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

