மலையகம்
தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா!

Mar 29, 2025 - 03:21 PM -

0

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தினை இ.தொ.கா இன்று (29) ஆரம்பித்துள்ளது.

 

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜைகளுடன், நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார பணிகளை ஆரம்பித்தது.

 

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் சந்திப்பொன்றும் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

 

இந்நிகழ்வின் போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05