செய்திகள்
நானுஓயா வரும் கலிப்சோ ரயில்

Mar 29, 2025 - 05:55 PM -

0

நானுஓயா வரும் கலிப்சோ ரயில்

பயணிகளின் கோரிக்கையை அடுத்து, "கலிப்சோ ரயிலை" நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


முன்னதாக, பதுளை ரயில் நிலையத்திலிருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை கலிப்சோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.


அதன்படி, ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்து நானுஓயாவிற்கு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.


கலிப்சோ ரயில், தெமோதர பகுதியில் 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவு பாலத்தில் 10 நிமிடங்களும் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றியுள்ள பகுதியைப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05