செய்திகள்
மியன்மார் நிலநடுக்கம் - செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

Mar 29, 2025 - 08:34 PM -

0

மியன்மார் நிலநடுக்கம் - செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

 

இந்த அனர்த்தத்தில் காணாமல் போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன். 

 

இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும்,  நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


 

Comments
0

MOST READ
01
02
03
04
05