செய்திகள்
மாத்தளை வனப்பகுதியில் இருந்து T-56 துப்பாக்கி ஒன்று கண்டுபிடிப்பு

Mar 30, 2025 - 07:39 AM -

0

மாத்தளை வனப்பகுதியில் இருந்து T-56 துப்பாக்கி ஒன்று கண்டுபிடிப்பு

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுது கங்கை வனப்பகுதியில் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ​​நேற்று (29) மாலை இந்த துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


குறித்த இடத்தில் T-56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இணைந்ததாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05