வடக்கு
அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்வெட்டு

Mar 30, 2025 - 10:06 AM -

0

அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்வெட்டு


யாழ்ப்பாணத்தில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

 

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் வெட்டு ஏற்பட்டது.

 

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (29) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே குறித்த சம்பவம் பதிவானது.

 

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உரையாற்றிக் கொண்டு இருந்தபோதே மின்தடை ஏற்பட்டது.


இதனால் சிறுது நேரம் நிகழ்வில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.

 

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை மின் தடை சிறிது நேரம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாண அலுவலகம் உறுதிப்படுத்தியது.

 

குறித்த நிகழ்வில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடித்துவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலித் சமரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05