விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்

Mar 30, 2025 - 01:31 PM -

0

ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்

நடப்பு ஐபிஎல் தொடரின் 9 ஆவது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் குவித்தது.

 

இதையடுத்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ