செய்திகள்
O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் ஆரம்பம்

Mar 30, 2025 - 01:45 PM -

0

O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05