செய்திகள்
அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்கும்

Mar 30, 2025 - 09:01 PM -

0

அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநீதியாக கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். 

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தற்போது பலர் கைது செய்யப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் சந்தேக நபரே. 

அவர்களுக்கு பிணை வழங்குவது என்பது சாதாரண நடைமுறை. அவர்கள் பிணையில் சென்றாலும் கூட வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று அவர்களுக்கான தீர்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனைகள் கிடைக்கும். 

அப்போது அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். பிணை என்பது பல வழக்குகளில் சாதாரண விடயம். 

வழக்குகளில் போதிய சாட்சியங்களை பெற்றே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். ஆகையால் தண்டனை நிச்சயமாக கிடைக்கும். இதில் அரசாங்காம் உறுதியாக உள்ளது. 

பட்டலந்த வதை முகாம் என்பது மக்களால் துன்பியல் சம்பவமாக கருதப்பட்ட விடயம். ஆனால் விசாரணைகள் என்பது கடந்த காலங்களில் எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படவில்லை. அது உண்மையில் துர்ப்பாக்கியமான ஒரு நிலமை. 

அதேநேரம், எங்களுடைய அரசாங்கம் அநீதியாக கொலை செய்யப்பட்டவர்கள், பட்டலந்த சித்திரவதை முகாம் ஊடாக சித்திரவதை செய்யப்பட்டு மனிதத்திற்கு அப்பால் சென்று மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டவர்களுக்குரிய விசாரணைகள் இடம்பெறும். 

அது தொடர்பான அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05