Mar 31, 2025 - 06:32 AM -
0
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.