Mar 31, 2025 - 11:15 AM -
0
Finagle Lanka தனியார் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த 2024 ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் வர்த்தகநாம உயர் விருது விழாவில் பேக்கரி கைத்தொழில்துறையின் வளர்ச்சி கருதி அளித்த தனித்துவமான பங்களிப்புக்காக சிறந்த கைத்தொழில் நாமமாக அறிவிக்கப்பட்டு (பாரியளவிலான – உணவு பாண கைத்தொழில்) தேசிய கைத்தொழில் நாம உயர் விருதையும் சிறந்த இறக்குமதி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்கான வெங்கலப் பதக்க விருதையும் வென்றுள்ளது. அதன் மூலம் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன் மற்றும் தரம் மீதான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது.
Finagle Lanka நிறுவனம் பாண், பனிஸ், கேக், குக்கீஸ் மற்றும் குளிரூட்டப்பட்ட மற்றும் பகுதியளவில் பேக் செய்யப்பட்ட பல்வேறு உணவுகளை சந்தைக்கு விநியோகித்து வருகிறது. KFC மற்றும் Burger King போன்ற சர்வதேச வர்த்தகநாமங்கள், முன்னணி உணவகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பேரங்காடித் தொகுதிகள் மற்றும் நாடெங்கிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் ஆகியவை இந் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, மாலைத்தீவு போன்ற நாடுகளுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வரும் இந் நிறுவனத்துக்குச் சொந்தமான நவீன தொழில்நுட்பத்தை கொண்ட கைத்தொழிற்சாலை ஏக்கலை கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ளது. அது இலங்கையின் பேக்கரி கைத்தொழில் நிறுவனமொன்று கொண்டுள்ள ஆகப் பெரியதும் உயர் வசதிகளை கொண்டதுமான கைத்தொழிற்சாலை ஆகும். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இதன் உற்பத்திச் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ISO 9001:2000 மற்றும் HACCP ஆகிய தரச் சான்றிதழ்களை வென்றுள்ள இலங்கையின் முதலாவது பேக்கரி நிறுவனமாக Finagle Lanka திகழ்கிறது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு தரச் சான்றிதழாக கருதப்படும் FSSC 22000 சான்றிதழையும் பெற்றுள்ள இந் நிறுவனம் தீவிர தரப் பரிசோதனை, வழங்கல் கணக்காய்வு, ஆய்வுக்கூட ஆராய்ச்சிகள் போன்ற செயற்பாடுகள் மூலம் உற்பத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துகிறது. தொழில்முயற்சிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப உயர்தரத்திலான பேக்கரி உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் Finagle Lanka நிறுவனம் குளிரூட்டப்பட்ட மற்றும் பகுதியளவில் பேக் செய்யப்பட்ட உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் முதன்மை இடத்தை பெறுகிறது. இதற்கு முன்னரும் இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.