ஏனையவை
காலி முகத்திடலில் இடம்பெற்ற தொழுகைகள் நிகழ்வுகள்

Mar 31, 2025 - 11:26 AM -

0

காலி முகத்திடலில் இடம்பெற்ற தொழுகைகள் நிகழ்வுகள்

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று (10) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

 

மேமன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் இன்று காலை காலி முகத்திடலில் சதுக்கத்தில் நடைபெற்றது.

 

இந்த தொழுகைகளில் பெரும் திரளான இஸ்லாமிய பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் இன்று காலை இடம்பெற்றது.

 

தொழுகைகள் நிறைவடைந்ததையடுத்து இஸ்லாமிய பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05