கிழக்கு
காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை

Mar 31, 2025 - 01:30 PM -

0

காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை

பல்லாயிரக்கான மக்களின் பங்கேற்புடன் காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

 

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (31) காலை 6.15 மணிக்கு இடம் பெற்றது.

 

நபிகளாரின் சுன்னாவுக்கு அமைவாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையையும்  அஷ்ஷெய்க் எம்.ஏ.சி. ஷைனுலாப்தீன் மதனி நடாத்தி வைத்தார். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

 

இதேவேளை இன்று மலர்ந்துள்ள. புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி ஆற்றங்கரை திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

 

அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சிராஜ் பலாஹி  பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05