வணிகம்
செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகள் கல்விக்கான ஒத்துழைப்பு மற்றும் சுற்றாடல் குறித்த விழிப்புணர்வு மூலம் சிறுவர்களை வலுவூட்டுகின்றன

Mar 31, 2025 - 03:11 PM -

0

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகள் கல்விக்கான ஒத்துழைப்பு மற்றும் சுற்றாடல் குறித்த விழிப்புணர்வு மூலம் சிறுவர்களை வலுவூட்டுகின்றன

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தேசத்தைப் போஷணையூட்டல் மற்றும் சமூகப் பொறுப்புத் தொடர்பில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறுவர்களின் கல்வி மற்றும் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் இரண்டு முயற்சிகளை அண்மையில் முன்னெடுத்தது. சிறந்த எதிர்காலத்திற்கு கல்வியே அடிக்கல் என செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் உறுதியாக நம்புகின்றது. இத்திட்டங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளின் ஒட்டுமொத்த அணுகுமுறையைப் பறைசாற்றுவதுடன்ரூபவ் இவை அடுத்த தலைமுறையினர் மத்தியில் கல்விக்கான தேவை மற்றும் சுற்றாடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. 

நிறுவனம் தனது வருடாந்த பாடசாலை விநியோக முயற்சியின் கீழ்ரூபவ் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பணியாளர்களுடைய 400 பிள்ளைகளுக்கு 2025 பாடசாலை தவணைக்கான அத்தியாவசியமான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளது. அதேநேரம்ரூபவ் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் ஊழியர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கான ஆதரவையும்ரூபவ் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை இணைக்கும் வகையில் உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டியொன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

பாடசாலை விநியோகத் திட்டத்தின் ஊடாக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் புத்தகங்கள் பாடசாலை பை மற்றும் சப்பாத்து உள்ளிட்ட கற்றல் உபகரணப் பொதியை வழங்கியது. செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தில் நேரடியாகப் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வெளியிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் இவை வழங்கப்பட்டன. கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு அப்பால் கல்வியில் மேற்கொள்ளும் முதலீடானது சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலம் மீது மேற்கொள்ளும் முதலீடு என்பது நிறுவனத்தின் நம்பிக்கையாகும். 

இந்த இளம் பராயத்தினரின் வெற்றிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதானது அவர்களின் கல்விசார் பயணத்திற்கான பாதைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நிறுவனம் நம்புகின்றது. இலங்கையின் உணவுத் துறையில் பிரதான நிறுவனம் என்ற ரீதியில் தேசத்தைப் போஷனையூட்டுவதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகின்றது. 

கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 2025 உலக நீர் தினத்தைக் கொண்டாடும் வகையில் செரண்டிப் போதுமை மா ஆலை நிறுவனம் ஓவியப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. நீரைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான நீர் முகாமைத்துவம் ஆகிய தொனிப் பொருளில் தமது ஓவியத் திறமைகளை வெளிப்படுத்த முன்வருமாறு செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் வெளியிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களின் பிள்ளைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் பற்றிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் படைப்பாற்றலை வளர்ப்பதை நோக்காக்க கொண்டே உலக நீர் தினத்தை முன்னிட்ட ஓவியப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த முயற்சியானது நிறுவனத்தின் நிலைபேறான இலக்குடன் இணங்கும் வகையில் அமைந்திருப்பதுடன் நீர் பாதுகாப்புத் தொடர்பில் சிறுவர்கள் கொண்டிருக்கும் புரிதலை ஓவியத்திறன் மூலம் வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குகின்றது. 

இந்த ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மார்ச் 26 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டனர். பல்வேறு வயதுப் பிரிவில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கான பரிசுகள் என்பன அறிவிக்கப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்கள் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் காட்சிப்படுத்தப்படும். 

இந்த முயற்சிகள் மூலம் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் 'தேசத்தைப் போஷனையூட்டல்' என்பதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பானது தரமான உணவுப் பொருட்களை வழங்குவது என்பதற்கு அப்பால் எதிர்கால சந்ததியினரின் அறிவுசார் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்ப்பது வரை நீண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 

7 ஸ்டார் கோதுமை மா தயாரிப்புக்களின் உற்பத்தியாளரான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் இலங்கையின் முன்னணி கோதுமை மா தயாரிப்பாளர் என்ற ரீதியில் உயர் தரத்திலான கோதுமை மாவை வழங்குவதுடன்ரூபவ் உறுதியான பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது. 

நிலையான வணிக நடைமுறைகள் மற்றும் சமூகங்களுக்கு மீண்டும் திருப்பியளிப்பது போன்றவற்றிலும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05