Mar 31, 2025 - 03:19 PM -
0
சீலைன் (Ceyline) குழுமத்தின் ஓர் துணை நிறுவனமான கார்கோசேர்வ் (Cargoserv) ஸிப்பிங் லிமிடட் ப்ரீமா சிலோனுடன் இணைந்து இலங்கையில் முதல் தடவையாக விரிவான ரயில் மூல போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தூரநோக்கை கொண்டு செயற்படும் இத்திட்டம் ரயில் மூலமான போக்குவரத்தின் வளங்களை அடிப்படையாக வைத்து விநியோக சங்கிலியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இயங்குகிறது. இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிப்பை கணிசமாக குறைத்து, செயல்திறனை அதிகரிப்பதனை நோக்காக கொண்டுள்ளது.
நெஸ்லே லங்கா லிமிடட் நிறுவனம் புதிதாக நிறுவப்பட்ட ரயில் வலையமைப்பை அதன் போக்குவரத்து தேவைகளுக்காக ஏற்றுக் கொண்ட முதல் வாடிக்கையாளராக பதிவானதன் மூலம் இச் செயல்திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதற்கு சான்று பகிர்கின்றது. இந் நிறுவனம் அதன் முதன் கொள்கலன் ஏற்றுமதிகளை திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு அனுப்பியதன் மூலம் அதன் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது என்பதனை உறுதிப்படுத்தியது. ஒரு ரயில் போக்குவரத்து வாரத்தில் 24 கொள்கலன்களை போக்குவரத்து செய்யக் கூடிய கொள்ளளவில், கார்கோசேர்வ் (ஊயசபழளநசஎ) நிறுவனம் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி 400 இற்கும் மேற்பட்ட இருபது அடி கொள்கலன்களை வெற்றிகரமாக நகர்த்த உதவியுள்ளது.
இந்த ரயில் மூல சரக்கு போக்குவரத்து திட்டத்தின் நம்பகத்தன்மை 2021 ஆண்டு முதல் ப்ரீமா நிறுவனத்துடன் இணைந்து தடையற்ற, முறையான போக்குவரத்தினை நடைபெறுவதனை உறுதி செய்ய கடுமையான முறையில் பரீட்சிக்கப்பட்டது.
ரயில் மூல போக்குவரத்து குறைவான காபன் வெளியீடு, அதிகளவிலான சரக்கு போக்குவரத்தின் மூலம் செலவினங்களை குறைத்தல், பாதை மூலமான போக்குவரத்தை சார்ந்திருப்பதை குறைப்பதன் மூலம் பாதை நெரிசலை குறைத்து, பாதுகாப்பை மேம்படுத்தல் போன்ற மூலோபாய நன்மைகளை வழங்குகின்றன. பாரம்பரிய லொரி மூல போக்குவரத்தை போலன்றி, ரயில் கால அட்டவணைகள் கணிக்கக் கூடியதாகவும், பாதை போக்குவரத்தால் பாதிக்கப்படாமலும் இருப்பதால் சரியான நேரத்தில் சரக்கு விநியோகம் நடைபெறுவதனை உறுதி செய்ய முடியுமாகின்றது.
இம்முக்கிய மைல்கல்லிற்கான ஒத்துழைப்பு குறித்து தொழில்துறை தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
'நிலையான சரக்கு போக்குவரத்தில் ஒரு புத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தும் இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ரயில் மூல போக்குவரத்தை விநியோக சங்கிலி நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் நாங்கள் செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச் சூழல்களுக்கு உகந்த தீர்வுகளை வழங்குதனையும் ஊக்குவிக்கின்றோம்.' என சீலைன் (Ceyline) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதுர லகிந்து கூறினார்.
'இலங்கையின் நிலையான சரக்கு போக்குவரத்தை நாங்கள் ஊக்குவிக்கும் அதே வேளையில், இலங்கையின் வணிகங்கள் தங்கள் நடவடிக்கைகளில் கார்பன் வெளியீட்டை குறைக்கும் இம்முயற்சியில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம். இம் முயற்சி இலங்கையின் சரக்கு போக்குவரத்து வலையமைப்புக்களை மேலும் பசுமையானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதற்கான ஓர் வழிமுறையாகும்' என்று கார்கோசேர்வ் (Cargoserv) ஸிப்பிங் லிமிடட் இன் பொது மேலாளர் பிரபாத் கருணாரத்ன கூறினார்.
ப்ரீமா நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் தர்ஷன டி சில்வா கருத்து தெரிவிக்கையில், பாதை போக்குவரத்திலிருந்து ரயில் போக்குவரத்திற்கு சரக்குகளை மாற்றுவதன் மூலம் ப்ரீமா ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் கிலோமீட்டர் லொரி இயக்கத்தினை நீக்கியுள்ளது. இதன் மூலம் பாதை நெரிசல் கணிசமாக குறைவடைந்துள்ளதுடன், எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளது. எங்கள் ரயில் போக்குவரத்து முயற்சியில் நெஸ்லேவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இலங்கை ரயில்வேயுடன் இணைந்து ரயில் சரக்கு போக்குவரத்தை ஒரு யதார்த்தமான விடயமாக மாற்றியதற்காக கார்கோசேர்வை பாராட்டுகிறோம்' என குறிப்பிட்டார்.
நெஸ்லே லங்காவின் விநியோகச் சங்கிலி இயக்குநர் காஞ்சன பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில். 'இந்த கூட்டாண்மை எங்கள் விநியோக வலையமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், காபன் வெளியீட்டை குறைப்பதன் மூலமும் எங்கள் நிலையான குறிக்கோள்களுடன் இணங்கிப் போகிறது. எங்கள் வணிகத்துக்கு நன்மை பயக்கின்ற அதே வேளையில் சுற்றுச் சுற்றுச் சூழலுக்கும் பயனளிக்கும் விதத்திலான மாற்று போக்குவரத்து தீர்வுகளை ஆராய்வது பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
கார்கோசேர்வ் (Cargoserv) நிறுவனம் பற்றி கூறுகையில், 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கார்கோசேர்வ் (Cargoserv) ஸிப்பிங் லிமிடட் சரக்கு அனுப்புதல், சரக்கு சேர்த்தல், NVOCC செயற்பாடுகள் மற்றும் கப்பல் முகவர் ஆகிய சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் ஆகும். இது சிலோன் கப்பல் முகவர்கள் சங்கம் (CASA) மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சபை (NCCSL) ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. மேலும் தகவலுக்கு, www.cargoserv.lk ஐ பார்வையிடவும் அல்லது marketing@cargoserv.lk ஐ தொடர்பு கொள்ளவும்.

