Mar 31, 2025 - 03:34 PM -
0
எமது சேவை மக்களுக்காகவே தான் இருக்க வேண்டுமே தவிர வாக்களிக்கும் மக்கள் எமக்கு சேவை செய்வதற்கு அல்ல என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நேற்று (30) நோர்வூட் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் சேவல் சின்னத்தை வெற்றிபெற வைத்து கடந்த காலங்களில் எவ்வாறு நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிப் பெற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடியினை பறக்க விட்டீர்களோ அதே போலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
நீங்கள் அனைவரும் ஒன்றை புறிந்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் என்னதான் சில அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கி இருந்தாலும், சில இடங்களில் சரியான உறுப்பினர்களை உருவாக்கவில்லை.
ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதைய வேட்பாளர்கள் அனைவரும் கடந்தக்கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு இம்முறை போட்டியிடுகின்ற புதிய வேட்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
--