Mar 31, 2025 - 04:28 PM -
0
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி, மியான்மருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் கூறினார்.