செய்திகள்
உதவியாளரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியுமா?

Mar 31, 2025 - 05:11 PM -

0

உதவியாளரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியுமா?

எதிர்வரும் தேர்தல்களின் போது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பார்வைப் பாதிப்பொன்றிற்கு அல்லது வேறு ஏதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்லத்தக்கவாறான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனினும், இவ்வாறு அழைத்துச் செல்லும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதோடு, அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவர் அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட அறிக்கையை கீழே காணலாம். 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05