Mar 31, 2025 - 05:32 PM -
0
மியான்மர் நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 2000இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ தலைமை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,900ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மியான்மரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் அந்நாட்டில் தேசிய துக்க வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.