விளையாட்டு
வெளியான மறைக்கப்பட்ட தகவல்

Mar 31, 2025 - 05:57 PM -

0

வெளியான மறைக்கப்பட்ட தகவல்

கிரிக்கெட் லெஜெண்டான ஷேன் வார்னின் மரணத்தில் மறைக்கப்பட்ட தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து துக்கம் அனுசரித்தனர். இந்த நிலையில்,

 

அவர் உயிரிழந்தவுடன், அவர் உடலுக்கு அருகில் இருந்த போதை மருந்து குறித்து உடற்கூறாய்வு அறிக்கையில் வெளிவரவில்லை எனக் தெரிவிக்கப்படுகிறது.

 

டெய்லி மெயிலின் செய்தி அறிக்கையின்படி,

 

ஷேன் வார்ன் உயிரிழந்தபிறகு, அவர் அருகில் இருந்த போதைப்பொருளை விசாரணை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

'காமக்ரா' என்ற ஒரு போதைப்பொருள் அவர் உயிரிழந்தபிறகு அவர் உடலுக்கு அருகில் கிடந்தது. அது உடலுறவை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு போதைப்பொருள்.

 

எங்கள் மேலதிகாரி அந்தப் போதைப்பொருளை எடுக்குமாறு கூறிவிட்டார். தாய்லாந்தில் அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்துவது சட்டவிரோதம். மேலும் இந்தப் போதைப்பொருள் குறித்த தகவல்கள் வெளிவராமல் இருப்பதற்குப் பின்னால் பல முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

 

'காமக்ரா' போதைப்பொருளை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர் உடலுக்கு அருகில் சற்று வாந்தி எடுத்ததற்கான அடையாளமும், ரத்தமும் இருந்ததாக அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார்.

 

தங்கள் லெஜெண்ட் ஒருவருக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது வெளியே வருவது, அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களும் இதற்குப் பின்னால் இருக்கலாம் என அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார்.

 

ஷேன் வார்ன் அதிகம் புகைப்பிடித்ததாலும், சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமலும் இருந்ததால் உயிரிழந்தார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

1992 முதல் 2007 வரை 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷேன் வார்ன், 1001 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, லெக் ஸ்பின் பந்துவீச்சிற்கு மீண்டும் உயிர் கொடுத்தவர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05