செய்திகள்
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

Mar 31, 2025 - 07:22 PM -

0

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

 

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,100 ரூபாவாகவும்,  5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,645 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05