செய்திகள்
பெற்றோல் விலை குறைப்பு

Mar 31, 2025 - 07:54 PM -

0

பெற்றோல் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 299 ரூபாவாகும்.

 

அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 361 ரூபாவாகும்.


ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி இருக்கும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, லங்கா வெள்ளை டீசல் லீற்றரின் விலை ரூபாய் 286 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் லீற்றரின் விலை ரூபாய் 331 ஆகவும் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை ரூபாய் 183 ஆகவும் மாற்றமின்றி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05