Mar 31, 2025 - 09:22 PM -
0
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை ரூபாய் 10 ஆல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 361 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.