செய்திகள்
பால் தேநீரின் விலை அதிகரிப்பு

Mar 31, 2025 - 10:49 PM -

0

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவு விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாளை (01) முதல் பால் மாவின் விலையை 4.7 சதவீதத்தால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் கடந்த 18ஆம் திகதி தீர்மானித்தனர்.


அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை சுமார் 50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05