Apr 1, 2025 - 09:16 AM -
0
வல்பொல பகுதியில் ரயில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கணையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (01) காலை வந்த ரயிலின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் இப்போது ராகம ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.