Apr 1, 2025 - 10:30 AM -
0
தொடங்கொட-களனிகம அதிவேக வீதியின் களனிகம நோக்கி செல்லும் 25.5 கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இரண்டு லொறிகள், ஒரு சொகுசு வேன் மற்றும் ஒரு கார் ஆகியவை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்னால் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற சொகுசு வேன் ஒன்று மோதியுள்ளது.
அதே நேரத்தில், பின்னால் வந்த காரும் வேன் மீது மோதியுள்ள நிலையில் விபத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.