வணிகம்
Prime Group இனால் அரச சேவை சிறப்பை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கமான பொது-தனியார் கைகோர்ப்பு அறிமுகம்

Apr 1, 2025 - 11:38 AM -

0

Prime Group இனால் அரச சேவை சிறப்பை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கமான பொது-தனியார் கைகோர்ப்பு அறிமுகம்

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் குழுமமான Prime Group, முன்னணி வியாபாரம்- அரசாங்கம் சமூகப் பொறுப்புணர்வு திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. தனியார் துறை மற்றும் உள்ளூராட்சி அதிகார அமைப்புகளிடையே இணைந்த செயற்பாட்டை கட்டியெழுப்புவதை இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பயிற்சிப்பட்டறைத் தொடர் இந்த புத்தாக்கமான நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுப்படவுள்ளதுடன், இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்துடன் (FSLGA) இணைந்து வடிவமைக்கப்பட்டிருந்தது. விசேடத்துவமான பயிற்சி மற்றும் அறிவு பகிர்வினூடாக திறன்களை கட்டியெழுப்பி பொது அதிகாரிகளுக்கு வலுவூட்டுவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 

இந்தத் திட்டத்தின் அறிமுக அமர்வு பெப்ரவரி 19ஆம் திகதி கம்பஹா மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கம்பஹா மாநகர சபையின் ஆளுனர் லோச்சனா பாலசூரிய அடங்கலாக அதிகாரிகளும், Prime Group இன் சார்பாக அதன் ஊழியர்கள் குழுவினரும் பங்கேற்றிருந்ததுடன், மத்திய மாகாண விசாரணை அதிகாரி, உதான வீரசிங்க இந்த நிகழ்வை வழிநடத்தியிருந்தார். 

லோச்சன பாலசூரிய குறிப்பிடுகையில், “தனியார் துறை மற்றும் உள்ளூராட்சி அதிகார அமைப்புகளிடையே இணைந்து செயலாற்றக்கூடிய பாலத்தை கட்டியெழுப்புவதில் Prime Group காண்பிக்கும் அர்ப்பணிப்பை நாம் வரவேற்கிறோம். இந்த புத்தாக்கமான தொடரினூடாக, பொது சேவை விநியோகம் மேம்படுத்தப்படும். எமது அதிகாரிகள் பெற்றுக் கொண்ட திறன் கட்டியெழுப்பல், விசேடத்துவ பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு போன்றவற்றினூடாக, தொழிற்துறைகள் மற்றும் சகல துறைகளிலும் வினைத்திறனான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த வேலைப்பாய்ச்சலை மேற்கொள்ள பங்களிப்புச் செலுத்தும்.” என்றார். 

ரியல் எஸ்டேட் துறையில் சேவைச் சிறப்பை மேம்படுத்துவதற்கும் உறுதியான பொது-தனியார் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பையும் Prime Group இன் நடவடிக்கை வழிகோலுவதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் போது, மாநகர சபை அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி சட்டம், நிதிசார் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அரசாங்க அதிகாரிகளுக்கு விசேடமான பயிற்சிகள் மற்றும் வளங்களை வழங்கி, அதிகம் வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மையைான பொதுச் சேவைகளை முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்க Prime Group எதிர்பார்க்கிறது. பரந்த திட்டத்தில் நிபுணர்களினால் முன்னெடுக்கப்படும் பயிற்சிப்பட்டறைகள், அத்தியாவசிய வளங்களுக்கான ஒதுக்கங்கள் மற்றும் பங்குபற்றும் அரச அதிகாரிகளுக்கு ஏற்பாட்டு வசதிகள் போன்றன உள்ளடங்கியிருந்தன. 

Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் உண்மையை முன்னேற்றத்தை Prime Group புரிந்துள்ளதுடன், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்கள் மத்தியில் உறுதியான பிணைப்பு அவசியமாகின்றது. தொழிற்துறைகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றும் பொது அதிகாரிகளின் ஆற்றல்களில் முதலீடு செய்வதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையினூடாக, தொழிற்துறையின் சிறந்த செயற்பாடுகள் மற்றும் புத்தாக்கமான வழிமுறைகளை Prime Group பகிர்ந்து கொள்கிறது. அதிகளவு வெளிப்படையான, வினைத்திறனான மற்றும் முன்னேற்றகரமான உள்ளூராட்சி ஆளுகை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்து, அதனூடாக குறிப்பாக இலங்கை குடிமக்கள் அடங்கலாக சகல பங்காளர்களுக்கும் அனுகூலமளிக்க Prime Group எதிர்பார்க்கிறது.” என்றார். 

Prime Group இன் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தினூடாக, பொது அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள் மற்றும் நவீன தொழினுட்பங்கள் வழங்கப்பட்டு, வினைத்திறனான பணிப்பாய்ச்சல்கள் நிறுவப்படும். இந்தத் திறன் கட்டியெழுப்பல் அமர்வுகளினூடாக, சகல துறைகளுக்கும் பயனளிக்கப்படுவதுடன், மிகவும் சாதகமான உள்ளூராட்சி சூழல்கட்டமை நிறுவக்கூடியதாகவும் இருக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05