Apr 1, 2025 - 12:09 PM -
0
இலங்கையின் முன்னணி அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனமான SLITT நிறுவனம் கல்வியின் சிறப்பு புத்தாக்கம் மற்றும் தொழில்துறைக்கான பங்களிப்பு உள்ளிட்ட தனது 25 வருட மரபைச் சிறப்பிக்கும் வெள்ளிவிழாவை 2025 மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடியது. இந்த நிகழ்வு கொழும்பு சினமன்ட் லைஃப் சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஹோட்டலில் கோலாகலமாக இடம்பெற்றது.
1999 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தொழிநுட்பக் கல்வியில் முன்னணியில் திகழ்ந்துவரும் SLITT நிறுவனம் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் தகவல்தொழில்நுட்பத் துறையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்திவருகின்றனர். SLITT நிறுவனத்தின் சிறப்பான பயணம் மற்றும் மாணவர்கள் பணியாளர்கள் தொழில்துறை பங்காளர்கள் உலகளாவிய ரீதியிலான பங்களிப்பாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான தளமாக இந்த வெள்ளிவிழாக் கொண்டாட்டம் அமைந்தது.
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய போல் ஸ்ரீஃபன்ஸ் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய எரிக் வோல்ஷ் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஹார்லென் ஹெய்ன் ஆகியோருடன் தொழில்துறை நிபுணர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். வெளிநாட்டுத் இராஜதந்திரிகள் SLITT பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பெருநிறுவனத் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள்ரூபவ் பல்கலைக்கழக பங்குதாரர்கள் சிரேஷ்ட கல்வியலாளர்கள் பெருநிறுவனப் பிரமுகர்கள் உள்ளிட்ட 350 ற்கும் அதிகமான விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
SLITT இன் நிறுவுனர் பேராசிரியர் லலித் கமகே நிறுவனத்தின் சிறப்பான பயணம் மற்றும் கடந்த 25 வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு.மனோ சேகரம் நிலைபேறு தன்மை மற்றும் SLITT பங்களித்துள்ள தொழில்துறை முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டினார். பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ பேராசிரியர் மஹீஷா கபுறுபண்டார கலாநிதி கல்பனி மதுகம ரந்திமா நிரோஷினி போன்ற புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்துகொண்ட குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த அமர்வைத் தொழில்முனைவரும் பெருநிறுவனப் பயிற்சியாளருமான பெர்னாடின் ஜெயசிங்க நெறியாழ்கை செய்தார்.
சவால்களைச் சமாளித்து SLITT நிறுவனம் கடந்த 25 வருடங்களில் அடைந்த பரிணாம வளர்ச்சி முக்கிய பிரமுகர்கள் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த பரந்த ஒத்துழைப்புக்கள் வளர்ச்சிக்குப் பங்களித்த உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் குறித்து இந்தக் குழுக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. திறமையாளர்களுக்குக் காணப்பட்ட கடுமையான தட்டுப்பாடு மற்றும் தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உருவாக்கி இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு SLITT எவ்வாறு கருவியாகச் செயற்பட்டது என்பது பற்றி குழுக் கலந்துரையாடலில் பங்கெடுத்த நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
40,000 ற்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏறத்தாழ 2 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.
இன்று வரையில் SLITT நிறுவனம் கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தகவல் தொழில்நுட்பத்திற்கு அப்பால் சென்று சைபர் பாதுகாப்பு மென்பொருள் பொறியியல் போன்ற பரந்துபட்ட துறைகள் மற்றும் பொறியியல் உயிரியல்தொழில்நுட்பம் தாதியியல் சட்டம் கட்டடவடிவமைப்பு உளவியல் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
உள்ளிருப்புப் பயிற்சி புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் சந்தைத் தேவையுடன் ஒத்துப் போகும் வகையிலான பாடத்திட்ட சீரமைப்பின் மூலம் நடைமுறையான தொழில்துறை இணைப்புக்களை SLITT முன்னணியாகக் கொண்டுள்ளது.
வெற்றிகரமான ஆரம்ப வணிகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய 2001ஆம் ஆண்டு இலங்கையி உருவாக்கப்பட்ட முதலாவது வணிக ரீதியான இன்கியூபேட்டர் உள்ளிட்ட புத்தாக்கமான முயற்சிகள் நிஜஉலகத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இந்த முயற்சிகளின் மூலம் SLITT இலங்கையின் தனியார் தகவல் தொழில்நுட்ப கல்வியை மாற்றியமைத்து வளர்ந்துவரும் தொழில்துறையின் போக்குகள் மற்றும் தலரநிலைகளைப் பேணி பல்வேறு துறைகளின் மத்தியில் உலகளாவிய ரீதியான போட்டித் தன்மையைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செலுத்தி தொழில்துறையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
SLITT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே தனது கருத்துக்களை குழுக் கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். அவர் குறிப்பிடுகையில் 'மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இருந்த 1998 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே தற்பொழுது எல்லோராலும் அறியப்படும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இலங்கை நிறுவனத்தை (SLITT) உருவாக்குவதற்கான எண்ணம் உதயமானது. பல்வேறு துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாம் முதலில் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தோம். இருப்பினும் 1999 ஆம் ஆண்டில் இந்த தொலைநோக்குப் பார்வை ஒரு சுயாதீன நிறுவனமாக பரிணமித்தது அரசாங்க நிதி குறித்த உறுதிப்பாடுகள் எதுவும் இல்லையென்பதால் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்டது.
கொள்ளுப்பிட்டியல் உள்ள இலங்கை வங்கியின் வணிகக் கோபுரக் கட்டடத்திலேயே SLITT இன் பயணம் ஆரம்பமானது. தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது 3,152 விண்ணப்பங்கள் கிடைத்ததுடன் இத்திட்டத்திற்கான மாணவர்களின் அனுமதி 400 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக SLITT வளர்ச்சிபெறத் தொடங்கியதும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் கீழ் லீசிங் ஒப்பந்தத்தில் மாலபே பிரதேசத்தில் காணியொன்றைப் பெற்றுக் கொண்டோம். இதற்கான லீசிங் ஒப்பந்தம் மற்றுமொரு 50 ஆண்டுகளுக்குத் தொடர்கின்றது. இன்று நாம் இலங்கை முழுவதிலும் வியாபித்திருப்பதுடன் பல்வேறு கம்பஸ்கள் மற்றும் நிறுவனங்களின் ஊடாகப் பல மாணவர்களுக்குக் கல்வியை வழங்குகின்றோம்' என்றார்.
மேலும் குறிப்பிட்ட அவர்ரூபவ் 'நிறுவனத்தின் பயணம் மற்றும் இலங்கையின் கல்வியில் இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் நான் மிகவும் பெருமையடைகின்றேன்' என்றார். இது வெறும் ஆரம்ப மட்டுமே. எமது மாணவர்களின் கல்விக்கு உயர்ந்த தரத்தைப் பேணும் அதேநேரம்ரூபவ் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் பங்களிப்புச் செலுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இன்று இங்கு வருகை தந்திருப்பவர்களுக்கும் இதில் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள். அசைக்க முடியாத உங்களின் ஆதரவு எங்கள் நிறுவனத்தை வடிவமைப்பதிலும்ரூபவ் எங்களின் வர்த்தகநாமத்தை வலுப்படுத்தி தேசத்திற்கு தரமான கல்வியை நாங்கள் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இன்றிரவு எங்கள் பகிரப்பட்ட வெற்றிக்கும் வரவிருக்கும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கும் பாராட்டுக்கள் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு அறிவுப் பகிர்வு பாராட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்ட கலவையாகக் காணப்பட்டதுடன் SLITT இன் டீம் டயமன்ட் குழுவின் வசீகரிக்கும் நிகழ்ச்சியும் இதில் அடங்கியிருந்தது. இந்த நிகழ்வு தொழில்துறைத் தலைவர்கள் கல்வியாளர்கள் மற்றும் பங்காளர்கள் மத்தியில் வலையமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.
SLITT இந்த குறிப்பிடத்தக்க இந்த வெற்றியைக் கொண்டாடும் வேளையில் நிறுவனம் உலகளாவிய ரீதியில் தனது தடத்தை விஸ்தரிப்பதற்கான திட்டங்களுடன் தொடர்ச்சியான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. கல்வி ஆய்வு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பில் சிறந்து விளங்குவதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் SLITT நிறுவனம் இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உயர்கல்வியில் ஒரு முன்னணி இடத்தில் உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு என்ற www.sliit.lk SLIIT நிறுவனத்தின் இணையத்தளத்திற்க விஜயம் செய்யவும்.