Apr 1, 2025 - 02:38 PM -
0
வர்த்தகம் தொடர்பான பல்வேறு சேவைகள் மூலம் நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கும் மிகப்பாரிய தனியார் துறை நிறுவனமாக திகழும் கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, அவர்களின் அனைத்து வர்த்தக நிதியியல் தேவைகளையும் இலகுவில் நிறைவேற்றும் வகையில் ஒரு அதிநவீன டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.
ComBank TradeLink என்பது ஒரு தடையற்ற, நுண்ணிய வகையில் இயக்கப்படுகின்ற, பயனாளிகளுக்கு நட்புறவான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான டிஜிட்டல் தளமாகும் ஆகும், இது முழு வாடிக்கையாளர் பயணத்தையும் உள்ளடக்கிய இறுதி-முனை தீர்வுகளை வழங்கும் வகையில் வர்த்தக நிதியியல் பரிவர்த்தனைகளை எளிதாக்கி துரிதப்படுத்துவதுடன் மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது.
ComBank TradeLink இனை பயன்படுத்தும் இறக்குமதியாளர்கள், இறக்குமதி கடன் கடிதங்கள், இறக்குமதி சேகரிப்பு ஆவணங்கள், கப்பல் உத்தரவாதங்கள் மற்றும் முன்பண ஆவணங்கள், திறந்த கணக்கு கொடுப்பனவுகள், முற்பண கொடுப்பனவுகள் மற்றும் உத்தரவாதக் கடிதங்கள் போன்ற விடயங்களுக்கு 24ஒ7 நிகழ்நேர டிஜிட்டல் அணுகலைப் பெறக்கூடியதாக இருக்கும்.
ஏற்றுமதியாளர்கள் இந்த நிகழ்நேர வளத்தின் மூலம் ஏற்றுமதி கடன் கடிதங்கள் மற்றும் ஏற்றுமதி சேகரிப்பு ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக அணுகக் கூடியதாக இருக்கும், இது அவர்களின் ஏற்றுமதி தொடர்பான பரிவர்த்தனைகளை விரைவுப்படுத்துவதுடன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த தளமானது அனைத்து துறைகளிலிருந்தும், பல்வேறு அளவுகள் மற்றும் திறன்களைக் கொண்ட வர்த்தகர்களை ஆதரிப்பதுடன்,மேலும் அவர்களுக்கு வங்கியுடன் மற்றொரு தொடர்பு பாதையை வழங்கும்.
கொமர்ஷல் வங்கியானது ஆரம்பத்திலிருந்தே, வர்த்தக நிதித் துறையில் முன்னணி ஸ்தானத்தில் இருந்து வருவதுடன், மேலும் வரலாற்று ரீதியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளில் நாட்டின் மிகப்பாரிய வசதிகளினை வழங்கும் தனியார் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது, என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறினார். வர்த்தக நிதியியல் வசதிக்கான இந்த உறுதிப்பாட்டின் மரபு இந்த சமீபத்திய முயற்சியுடன் தொடர்கிறது, இது, இந்தத் துறையில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மாற்றங்களுடன் விரிவடைந்து பரிணமிக்கும் விரிவான நிகழ்நேர சேவைகளுடன் வர்த்தக நிதியை டிஜிட்டல் துறைக்கு எடுத்துச் செல்லும்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.