Apr 1, 2025 - 02:44 PM -
0
சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் ரமழான் நோன்பு துறப்பதற்கான வாய்ப்பை களுத்துறை அல் மத்ரசதுல் பத்ரியாவின் 75 மாணவர்களுக்கு வழங்கியிருந்தது. சமூகங்களிடையே அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் திரண்ட முயற்சியை உணர்த்துவதை நினைவூட்டுவதாக ரமழான் அமைந்துள்ளது. தேவையுடைய சமூகங்களுடன் இந்த புனித மாதத்தை கொண்டாடுவதுடன், இஸ்லாமில் குறிப்பிடப்பட்டுள்ள ஈகையின் முக்கியத்துவத்திலும் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
SLT-MOBITEL இன் சமூக சென்றடைவு திட்டமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பிரதிபலிப்பு, நன்மதிப்பு மற்றும் வழங்கல் போன்ற ரமழானின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது. உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானவர்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில், பசியை நீக்கி, உறுதித்தன்மையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை ரமழான் உணர்த்துவதாக நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இறை ஆசிகளுடன், ஆரோக்கியமான முறையில் இப்தாரை அனுஷ்டிக்க வசதி வழங்கியிருந்தமைக்கு மேலதிகமாக, தனது சமூக, சூழல் மற்றும் ஆளுகை (ESG) செயற்திட்டத்தின் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி தனது ஆதரவை மேலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த சிந்தனைமிகு பங்களிப்பு என்பது, மாணவர்களுக்கு தமது கல்விக்கு அவசியமான வளங்களையும், நலனை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமன்றி, நிலைபேறான சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. இளம் பயிலுனர்களின் உடல் மற்றும் உள நலனை கட்டியெழுப்புவதனூடாக, சமூகத்தில் நேர்த்தியான மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீளுறுதி செய்துள்ளது.