வணிகம்
மேம்பட்ட வள சுழற்சித் தீர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் INSEE Ecocycle நிறுவனம் நடத்திய நிலைப்புத் தன்மையை நோக்கிய வளங்களின் வினைத்திறன் சர்வதேச மாநாடு (ICRES 2025)

Apr 1, 2025 - 04:29 PM -

0

மேம்பட்ட வள சுழற்சித் தீர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் INSEE Ecocycle நிறுவனம் நடத்திய நிலைப்புத் தன்மையை நோக்கிய வளங்களின் வினைத்திறன் சர்வதேச மாநாடு (ICRES 2025)

Siam City Cement (Lanka) Limited (INSEE Cement) நிறுவனத்தின் முழுமையான உறுப்பு நிறுவனமான INSEE Ecocycle Lanka (தனியார்) நிறுவனம் நிலைப்புத் தன்மையை நோக்கிய வளங்களின் வினைத்திறன் சர்வதேச மாநாட்டை (ICRES 2025) கொழும்பு சினமன்ட் லைஃப்-சிட்டி ஒஃப் டீம்ஸ் ஹோட்டலில் அண்மையில் வெற்றியகரமாக நடத்தியது. 'மீள்தன்மை கொண்ட எதிர்காலத்திற்கு வினைத்திறனான வளம்' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள்ரூபவ் கல்வியியல் ஆய்வாளர்கள் இலங்கை மற்றும் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்த கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட 600ற்கும் அதிகமானாவர்கள் கலந்துகொண்டனர். 

விசேடமான இந்த மாநாட்டில் அங்குரார்ப்பண நிகழ்வு அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பம் சார் அமர்வு மற்றும் "Future360: Connected Circularity" என்ற தலைப்பிலான பிரதம நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் அமர்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் தீர்வுகள் நிலையான கழிவு முகாமைத்துவம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாடு குறித்த பதின்மூன்று அதிநவீன கருப்பொருட்களில் பங்குபற்றுனர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். 

INSEE Cement Lanka நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க குறிப்பிடுகையில் 'சர்வதேச நிபுணத்துவத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேல் கொண்டுள்ள அனுபவத்தின் காரணமாக எமது தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் INSEE Ecocycle நிறுவனம் ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது. நிலைப்புத் தன்மக்கான குறிக்கோள் 2030 இன் மூலம் சுற்றுச்சூழல் சமூகம் மற்றும் ஆளுகை (ESG) ஆகிய கொள்கைகள் எமது பெருநிறுவனக் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளன. புதுமை படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நாம் நம்புகின்றோம். இதனாலேயே ICRES 2025 மாநாட்டின் ஊடாக ஒன்றிணைவதற்கான தளமொன்றை உருவாக்கியுள்ளோம்' என்றார். 

அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உருவாக்குவதற்கும் இந்த மாநாடு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் கல்வியியலாளர்கள் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனத் துறையினரையும் ஒன்றாக இணைத்தது. தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்க்கும் அதேநேரம் சுற்றுச்சூழல் பற்றிய சவால்களை எதிர்கொள்வதற்கான உருமாற்ற அணுகுமுறைகள் குறித்துப் பங்கேற்பாளர்கள் விரிவாக ஆராய்ந்தனர். 

INSEE Ecocycle Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜித் குணவர்தன குறிப்பிடுகையில், 'இலங்கையில் கழிவு மேலாண்மைத் துறையில் ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதில் பல முக்கிய சவால்கள் உள்ளன. தொழில்நுட்ப வரம்புகள் பொருளாதார கட்டுப்பாடுகள் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ஒழுங்குமுறை தேவை ஆகியவை அவற்றில் சில. INSEE Ecocycle என்பது நிலையான கழிவு முகாமைத்துவத்தில் முன்னணியில் உள்ளதொரு நிறுவனமாகும். இந்த சவால்களை சமாளிக்க ஒரு கூட்டுப்பொறுப்பு மிக்க திட்டம் அவசியம். இதன் காரணமாகவு இத்துறையில் உள்ள நிபுணர்கள் கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டுப்பொறுப்புடன் புதுமைகளை உருவாக்கி நிலையான வளர்ச்சிக்கு உறுதியளிக்க ஒரு தளத்தை உருவாக்க ICRES 2025 மாநாட்டை நாங்கள் ஏற்பாடு செய்தோம்' என்றார். 

மாநாட்டின் சிறப்பம்சமாக 'சுழற்சியான சவால்கள்' என்ற விடயம் அமைந்திருந்ததுடன் இது வளங்களின் சுழற்சித் தன்மைக்குத் தீர்வு காணும் வகையில் புத்தாக்கத்தை அடையாளம் கண்டது. ​​நிலையான வளர்ச்சிக்கான தனித்துவமான தீர்வுகளை முன்வைத்த வெற்றியாளர்களுக்கும் இங்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

பேராதனைப் பல்கலைக்கழகம் ருஹூணு பல்கலைக்கழகம் மொரட்டுவ பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு கர்டின் பல்கலைக்கழகம் RMIT பல்கலைக்கழகம் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் வெனிஸின் Ca' Foscari பல்கலைக்கழகம் மற்றும் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஒன்பது மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுடன் இணைந்து GapHQ இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தது. 

ICRES 2025 மாநாடென்பது இலங்கையை ஒரு சுழற்சிப் பொருளாதார மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான INSEE Ecocycle இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் ஒரு மாநாடாகும். ஒத்துழைப்புக்கான சர்வதேச தளத்தை வழங்கும் INSEE Ecocycle நிறுவனம் நிலையான கழிவு முகாமைத்துவ நடைமுறைகளைத் தொடர்ந்து முன்னோடியாகக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு நிலையான இலங்கையை உருவாக்க தொழில்துறைக்குள் புதுமைகளை வளர்ப்பதில் பங்களிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05