செய்திகள்
பஸ் கட்டணம் குறித்து வௌியான அறிவிப்பு

Apr 1, 2025 - 11:10 PM -

0

பஸ் கட்டணம் குறித்து வௌியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


நேற்று (31) எரிபொருள் விலையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


"டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தால், பேருந்து கட்டணத்தின் பலன் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது குறைக்கப்பட்டிருப்பது பெற்றோல். வருடாந்திர பேருந்து கட்டணம் ஜூன் மாத தொடக்கத்தில் வரவுள்ளது. நான் பொறுப்புடன் கூறுகிறேன். எனவே, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்." என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05