இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தொடர்ச்சியாக நான்காவது முறையாக தடையின்றி தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மூன்று குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (01) நடைபெற்ற அந்த பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மனித வள மற்றும் ஊதியக் குழு, நிதி மற்றும் வணிகக் குழு, மற்றும் பரிந்துரைக் குழு ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில், ஷம்மி சில்வா தொடர்ச்சியாக நான்காவது முறையாக தலைவர் பதவிக்கு தடையின்றி தெரிவு செய்யப்பட்டார்.
ஷம்மி சில்வா தற்போது ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் உள்ளார்.