செய்திகள்
UK தடை குறித்து ஆராய அமைச்சர்கள் குழு

Apr 2, 2025 - 03:51 PM -

0

UK தடை குறித்து ஆராய அமைச்சர்கள் குழு

இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. 
 

அதுதொடர்பாக விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிஅமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற, குறித்த விடயம் தொடர்பான நிபுணத்துவத்துவம் மிக்க வேறெந்த அதிகாரியோ, நிபுணர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

• விஜித ஹேரத் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 

• (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் 

•அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சர்

Comments
0

MOST READ
01
02
03
04
05