செய்திகள்
ராஜாங்கனையே சத்தாரதன தேரர் நீக்கம்

Apr 2, 2025 - 04:31 PM -

0

ராஜாங்கனையே சத்தாரதன தேரர் நீக்கம்

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை சங்க சபையிலிருந்து நீக்குவதற்கு இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் செயற் குழு தீர்மானித்துள்ளது. 

ராஜாங்கனையே சத்தாரதன தேரர் யூடியூப் செனலை நடத்தி சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை உருவாகியது. 

இந்த விவகாரம் குறித்து இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காய விசாரணை நடத்தியதாகவும், அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராமஞ்ஞ மஹா நிக்காயவின் தேரர் ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05