ஜோதிடம்
இன்றைய ராசி பலன்! (3.4.2025)

Apr 3, 2025 - 09:08 AM -

0

இன்றைய ராசி பலன்! (3.4.2025)

இன்று (03) குரோதி வருடம் பங்குனி மாதம் 20, வியாழக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

 

மேஷம்

 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனால் குடும்பத்தில் தேவையற்ற சலசலப்பு ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மேலதிகாரிகளுடன் பணிவாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளவும். இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில்துறையில் சாதகமான படங்கள் கிடைக்கும். இந்த வியாபாரத்தில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கை சாதகமாக இருக்கும்.

 

ரிஷபம்

 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள், நபர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைப்பதில் ஏற்றத்தாழ்வான சூழல் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியான சூழல் இருக்கும். இன்று மதியத்திற்கு பிறகு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்கள், செலவுகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வில் மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பயணங்கள் மூலம் புதிய தொடர்புகள் கிடைக்கும்.

 

கடகம்

 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வேலை தொடர்பாக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இன்றும் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று பிள்ளைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். காதல் விஷயத்தை கவனமாக செயல்படவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிட வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் கடின உழைப்பு தேவைப்படும். இன்று நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வாய்ப்பு உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி கிடைக்கும்.

 

கன்னி

 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காதல் விஷயத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். இன்று குடும்ப உறவில் பதட்டமான சூழல் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும் செல்வாக்கு அதிகரிக்கும். விளையாட்டு போட்டி, தேர்வுக்கு தயாராக கூடிய நபர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பலவீனமான நாளாக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. உங்கள் வேலையிலும், குடும்ப விஷயத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நண்பகல் வரை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அனுபவிப்பீர்கள். மதியத்திற்குப் பின்னர் எந்த செயலிலும் கூடுதல் கவனம் தேவை. கடின உழைப்பின் மூலம் மட்டுமே எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். குடும்ப வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் முதலீடு, புதிய வேலையை தொடங்குதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தாயின் உடல்நலம் மேம்படும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்கள் சாதகமற்றதாக இருக்கும். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவதோடு, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்ததை விட வருமானம் குறைவாகவே கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் பெறுவீர்கள். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். விவாதங்களைத் தவிர்ப்பதோடு விட்டுக் கொடுத்து செல்லவும். எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் ஏற்படும். பணி சுமை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.

 

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் பெறக்கூடிய நாள். உடன் பிறந்தவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றிகள் பெறுவீர்கள். இன்று உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. இன்று உங்கள் வேலை தொடர்பாக தொடர்ச்சியான சிரமங்களையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சிந்தனையுடன் செயல்படவும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிக்க முடியும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. இன்று வருமானம் மேம்படும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வணிகத்தை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. காதல் உறவு ஆதரவு இனிமையாக இருக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05