Apr 3, 2025 - 01:28 PM -
0
சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ முன்னிட்டு, Fems இனால் ஆதரவளிக்கப்படும் H.E.R Foundation இனால், இலங்கையின் சிறைச்சாலைகளைச் சேர்ந்த பெண் கைதிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் அமர்வுகளை முன்னெடுக்கப்பட்டது. மார்ச் மாதம் முழுவதிலும் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டதுடன், போகம்பர சிறைச்சாலையில் ஆரம்பித்து, அங்குனகொலபெலஸ்ஸ, நீர்கொழும்பு, குருவிட்ட மற்றும் அனுராதபுரம் ஆகிய 06 புனர்வாழ்வளிப்பு நிலையங்களைச் சேர்ந்த 250 பெண் கைதிகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் காணப்படும் மனநிலை மற்றும் அபிப்பிராயங்களை மாற்றியமைக்கும் Fems இன் முயற்சிகளின் மற்றுமொரு மைல்கல் நடவடிக்கையாக இந்தச் செயற்பாடு அமைந்திருந்தது.
Hemas Consumer Brands இன் பெண்கள் தூய்மை தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் சச்சினி கமகே கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு பெண்ணுக்கும் சமத்துவமான மற்றும் உள்ளடக்கமான சமூகத்தை உருவாக்குவதில் எமது அர்ப்பணிப்பு தொடர்கிறது. சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு அமர்வினூடாக, முறையான அறிவூட்டலினூடாக பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாம் பங்களிப்பு வழங்கியிருந்தோம்.” என்றார்.
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புனர்வாழ்வளிப்பு ஆளுனர் ஜகத் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “புனர்வாழ்வளிப்பு நிலையங்களில் அதிகளவு கவனம் செலுத்தப்படாத விடயமாக முறையான மாதவிடாய் தூய்மை வசதியின்மை அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல், Fems இனால் மாதாந்தம் மத்திய சிறைச்சாலை கட்டமைப்புக்கு மாதவிடாய் தூய்மை அணையாடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டு, இலங்கையின் சிறைச்சாலைகளைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமான பராமரிப்பு மற்றும் கண்ணியத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. மேலும், சர்வதேச மகளிர் தினத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு அமர்வுகளினூடாக, அவர்களுக்கு அவசியமான அறிவூட்டல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது கட்டமைப்பில் பெண்களின் சுகாதார சேவைகளில் காணப்படும் இடைவெளிகளை சீர் செய்வதற்கு இந்த பங்காண்மை உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
இலங்கையில் மாதவிடாய் தூய்மையை அணுகுவதில் காணப்படும் இடைவெளி என்பது, தயாரிப்பை பெற்றுக் கொள்வதற்கு அப்பாலானதாக அமைந்துள்ளது. பெண்களின் கண்ணியம், கல்வி மற்றும் வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அமைதியான போராட்டமாக அமைந்துள்ளது. பெண் சிறைக்கைதிகளுக்கு, இந்த சவால் என்பது மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, அந்த சமத்துவமின்மைக்கு எதிராக செயலாற்றப்படுவதுடன், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் கண்ணியம் என்பது உரிமையாக அமைந்திருப்பதையும், அது ஒரு சிறப்பு வசதியாக இல்லாமையை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.
Fems அதன் H.E.R. Foundation ஊடாக, மாதவிடாய் தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் தடைகள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. உதவி, வலுவூட்டல் மற்றும் கட்டியெழுப்பல் ஆகிய அத்தியாவசிய அரண்களுக்கமைவான மூலோபாய கட்டமைப்பினூடாக கட்டியெழுப்பப்பட்ட இந்த மையத்தினூடாக, பெண்கள் அனுபவங்கள், வாய்ப்புகள் மற்றும் சுய-தோற்றப்பாடு ஆகியவற்றில் நீடித்து நிலைத்திருக்கும், அர்த்தமுள்ள மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச மகளிர் தினத்தில் மாத்திரம் அடையாளமாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அப்பாற்பட்ட, பெண்களுக்கான வலுவூட்டலுக்குரிய வருடம் முழுவதிலும் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தயாரிப்புகளை வழங்கி ஆதரவளிக்கின்றமைக்கு மேலதிகமாக, பங்குபற்றுனர்களால் கேட்கப்படும் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய வினாக்களுக்கு சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் பதிலளிக்கும் விழிப்புணர்வூட்டும் அமர்வுகளும் அடங்கியுள்ளன. வழமையாக கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில், பெண்களுக்கு தமது இரகசியத்தன்மை வாய்ந்த சுகாதார பிரச்சனைகள் பற்றி கேட்டு தெளிவுபடுத்தல்களை பெறுவதற்கு மிகவும் சில வாய்ப்புகள் மாத்திரமே கிடைக்கும். புனர்வாழ்வளிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், மாதவிடாய் தூய்மை அணையாடை தயாரிப்புகளை பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி இந்த பரந்த வழிமுறைகளை கவனம் செலுத்தி, அவர்களுக்கு தங்கியிருக்கக்கூடிய தகவல்களைப்பெற்று, ஆதரவளிக்கும் சூழலை உருவாக்கி, அவர்களின் கண்ணியம் மற்றும் சுகாதார தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
H.E.R Foundation பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கும், அதன் பிந்திய செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் https://herfoundation.lk/ எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

