Apr 3, 2025 - 01:32 PM -
0
இலங்கையில் பால் உற்பத்தித்துறையின் அத்திவாரமாகத் திகழ்ந்து வந்துள்ள Lanka Milk Foods (CWE) PLC, மகத்துவத்தின் முன்னோடியாகவும், தரம் மற்றும் போசாக்கு ஆகியவற்றில் புதிய தராதரங்களை நிலைநாட்டியவாறும் சிறப்பாகப் பயணித்துள்ளது. அதன் பிரதான வர்த்தகநாமமான லக்ஸ்பிறே, ஆறு தசாப்தங்களாக அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகத் திகழ்ந்து வந்துள்ளதுடன், நம்பிக்கை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாகவும் காணப்படுகின்றது. தூய, உயர் தரம் கொண்ட பாலை வழங்கும் தனது வாக்குறுதியை எப்போதும் கட்டிக்காத்து வந்துள்ள ஒரு தயாரிப்பான லக்ஸ்பிறே வழங்கும் ஒப்பற்ற பாற்சுவையை இலங்கை மக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்துள்ளனர்.
லக்ஸ்பிறே என்பதை வெறுமனே ஒரு வர்த்தகநாமம் என்ற வார்த்தையினுள் அடக்குவதுடன் மாத்திரம் நின்று விட முடியாது. அது போசாக்கு மற்றும் நலனின் ஒரு புகழ்பூத்த பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. 100% தூய பசுப்பாலிலிருந்து பெறப்படுகின்ற முழு ஆடைப் பால்மா என்ற வகையில், நாம் அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை பாலும் உண்மையானது மற்றும் ஆரோக்கியமானது என்பதை உறுதி செய்து, எவ்விதமான சேர்க்கைப் பொருட்களோ அல்லது பதப்படுத்துவதற்காக இடப்பட்டுள்ள பொருட்களோ கிடையாது. சிறந்த கரையும் திறன் மற்றும் கவர்ச்சியான தோற்ற அமைப்பு ஆகியன அதனை நேர்த்தியான தெரிவாக மாற்றியுள்ளதுடன், அத்தியாவசியமான புரதங்கள், விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் ஆகியவற்றை வழங்கும் நம்பகமான மூலத்தை அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குகின்றது. நுகர்வோரின் பல்வகைப்பட்ட தேவைகளையும் நிறைவேற்றுகின்ற லக்ஸ்பிறே, வெவ்வேறுபட்ட அளவுகள் கொண்ட பாக்கெட்டுக்களில் கிடைப்பதால், சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலுள்ளவர்களும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.
தரத்தின் மீது இவ்வர்த்தகநாமம் காண்பிக்கும் இடைவிடாத அர்ப்பணிப்புக்காக பல மேடைகளில் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் அது சம்பாதித்துள்ளது. ஆரம்ப காலங்களிலேயே ISO 9001:2000 தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கை வர்த்தகநாமங்கள் மத்தியில் லக்ஸ்பிறேயும் இடம்பெறுவதுடன், சர்வதேச தராதரங்களைப் பேணுவதில் தனது அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. தமது உடல்நலன் மீது அக்கறை கொண்டுள்ள நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதன் விசேட துணைப் பிரிவு வர்த்தகநாமத்திற்கு Sri Lanka Institute of Marketing (SLIM) விருதுகள் நிகழ்வில் தங்கத்தை வென்று, வர்த்தகநாமத்தின் மேன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. Superbrand அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டமை, சர்வதேசரீதியாக நன்மதிப்புப் பெற்ற ஒரு தயாரிப்பு என்ற லக்ஸ்பிறேயின் ஸ்தானத்தை ஆணித்தரமாக்கியுள்ளதுடன், தனது வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகின்ற ஒரு வர்த்தகநாமம் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆசியாவிலுள்ள அதிநவீன பால்மா பொதியிடல் ஆலைகளில் ஒன்றில் தயாரிக்கப்படும் லக்ஸ்பிறே, சுத்தம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களைப் பேணுகின்றது. அது பாலைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், நியூசிலாந்திலுள்ள உயர் தர வழங்குனர்களிடமிருந்து பால் பெறப்படுகின்றது. பாலின் இயற்கை நலச்செழுமையைப் பேணிப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன பதப்படுத்தல் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, எவ்விதமான குறையுமின்றி புத்தம்புதிய, போசாக்கு மிக்க பாற்பொருளை நுகர்வோர் சுவைத்து மகிழ்வதற்கு இடமளிக்கப்படுகின்றது. ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் லக்ஸ்பிறேயின் வகிபாகம் ஆவண ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு அவசியமான கல்சியம் கிடைக்கும் மிக முக்கியமான மூலங்களில் ஒன்றாக பால் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
போசாக்கு ரீதியான மதிப்பிற்கு அப்பால், இலங்கை குடும்பங்கள் மத்தியில் ஆழமான உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தையும் லக்ஸ்பிறே கொண்டுள்ளது. சோதனைமிக்க காலகட்டங்களில் தோள் கொடுத்து, தமது அன்பிற்குரியவர்களுக்கு மிகச் சிறந்தவற்றை மாத்திரமே கொடுப்பதை எப்போதும் விரும்புகின்ற தாய்மார் மற்றும் பராமரிப்பாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. தரத்தின் மீது இடைவிடாத அர்ப்பணிப்பை தனது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றச் செய்துள்ள இந்த வர்த்தகநாமம், நம்பகத்தன்மை மற்றும் அக்கறை ஆகியவற்றின் அடையாளமாகவும் திகழ்கின்றது. காலத்தால் அழியாத நம்பிக்கையே அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் அனைத்து இல்லங்களிலும் பிரதானம் மிக்க ஒன்றாக தொடர்ந்தும் திகழ்வதற்கு லக்ஸ்பிறேக்கு இடமளித்துள்ளது.
Lanka Milk Foods (CWE) PLC இந்த மகத்தான சாதனையை எட்டியுள்ள தருணத்தில், இது வரையில் லக்ஸ்பிறே கடந்து வந்துள்ள பயணத்தில் அது காண்பித்து வந்துள்ள அர்ப்பணிப்பை எதிர்காலத்திலும் தொடர்ந்து கட்டிக்காப்பதில் லக்ஸ்பிறே உறுதியாக உள்ளது. எத்தனையோ தசாப்த காலமாக போசாக்கு மற்றும் தரம் ஆகியவற்றிற்காக மக்கள் லக்ஸ்பிறே மீது வைத்துள்ள நம்பிக்கையை எதிர்காலத் தலைமுறைகள் மத்தியில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்தவாறு, மேன்மை மற்றும் மகத்துவம் ஆகியவற்றின் மீது இவ்வர்த்தகநாமம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள வலுவான அத்திவாரத்துடன், இனி வரும் காலங்களிலும், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பால்மா வர்த்தகநாமம் என்ற ஸ்தானத்தை லக்ஸ்பிறே தொடர்ந்தும் கட்டிக்காக்கும்.