Apr 3, 2025 - 01:44 PM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனமானது தொடர்ச்சியாக 19 வது ஆண்டாக ஆண்டிற்கான மக்கள் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் விருதை வென்றுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) நடாத்தப்பட்ட SLIM Kantar மக்கள் வருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது நிறுவனமானது இந்த SLIM Kantar மக்கள் விருதை வென்றதன் மூலம் இலங்கையில் நுகர்வோர் சார்ந்த அங்கீகாரத்திற்கான உயர் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமானது (SLIM) உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kantar உடன் இணைந்து வழங்கும் இந்த மக்கள் விருதுகள், நுகர்வோர் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளால்,தீர்மானிக்கப்படுகிறது.இது மக்களின் உணர்வின் துல்லியமான பிரதிபலிப்பாக அமைகிறது. இந்த மக்கள் விருதுகள் வழங்கும் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை வெல்லும் ஒரே நிறுவனமாக செலிங்கோ லைஃப் நிறுவனமானது திகழ்வது குறிப்பிடத்தக்கது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப்பின்னராகஇ SLIM Kantar மக்கள் விருது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை ஆயுள் காப்புறுதித் துறையில் அதன் சந்தைத் தலைமைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவுள்ளது.
மக்கள் விருதுகளில் நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்து கருத்து தெரிவித்த செலிங்கோ லைஃப் பிரதி பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.சமித ஹேமச்சந்திர, எமது வெற்றி பொதுமக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது நாம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதையும் அதனை தக்க வைப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. தொடர்ந்து 19 ஆண்டுகளாக மக்கள் விருதை வெல்வது என்பது ஒரு அசாதாரண சாதனையாகும், இந்த கௌரவத்தை சிறந்த நடைமுறைகளை பின்பற்றாமல் அடைய முடியாது. இந்த விருதை வென்றமை தொடர்பாக நாம் பெருமை கொள்கிறோம், இது எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தை பிரதிபலிப்பதாகவுள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மொத்த எழுதப்பட்ட பிரீமியம் வருமானம் ரூ. 37.14 பில்லியனாகவும், முதலீடு மற்றும் இதர வருமானம் ரூ. 28.4 பில்லியனாகவும், ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 65.54 பில்லியனாகவும் பதிவு செய்யப்பட்டது. காப்புறுதிதாரர்கள் 2024 ஆம் ஆண்டில் நிகர உரிமைகோரல்கள் மற்றும் சலுகைகளில் ரூ. 25 பில்லியனைப் பெற்றனர், மேலும் நிறுவனத்தின் ஆயுள் நிதியானது ஆண்டிறுதியில் ரூ. 180.89 பில்லியனாக வளர்ச்சியடைந்தது. 2024 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மொத்த சொத்துக்கள் ரூ. 251.4 பில்லியனாகவும், நிறுவனத்தின் முதலீட்டுத் தொகுதியானது ரூ. 222.5 பில்லியனாகவும் அதிகரித்தன.
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.