வணிகம்
SLIIT நிறுவனம் தனது கல்வியின் சிறப்பை 2025 மார்ச் பட்டமளிப்பு விழாவில் கொண்டாடியது

Apr 3, 2025 - 02:07 PM -

0

SLIIT நிறுவனம் தனது கல்வியின் சிறப்பை 2025 மார்ச் பட்டமளிப்பு விழாவில் கொண்டாடியது

டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025ல் தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்ட இலங்கையின் முதல்தர அரசசார்பற்ற பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்ற SLIIT, தனது 2025 மார்ச் பட்டமளிப்பு விழாவை அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. இது மூன்று நாள் நிகழ்வாக மார்ச் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் உள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் கல்விச் சாதனையைக் கொண்டாடும் வகையிலும், அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் உச்சத்தைக் கொண்டாடும் வகையிலும் இந்தப் பட்டமளிப்பு விழா அமைந்தது. பட்டங்களை வழங்குவதற்கு அப்பால் SLIIT இல் உருவாக்கப்பட்ட சிறப்புக்கான கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உயர் தகுதி பெற்ற மாணவர்களுக்கு கல்வி சாதனை விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

இந்தப் பட்டமளிப்பு விழாவில் IFS R&D International இன் பிரதம தகவல் அதிகாரி ஹெலெனா நிமோ, Bedfordshire பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் (சர்வதேசம்) திரு.எட்ரின் டச், ஐக்கிய இராச்சியம் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வணிகம் மற்றம் சட்ட பீடத்தின் இணை பீடாதிபதி கலாநிதி அலிசன் லூயி உள்ளிட்ட கௌரவ விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 

பெரும்பாலான பட்டதாரிகள் தமது கல்வி வாழ்க்கையிலிருந்து தொழில்முறை வாழ்க்கைக்கு மாறுவதால் இந்தப் பட்டமளிப்பு விழா குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. உலகத்தரத்திலான கல்வியை வழங்குவதிலும், உலகளாவிய ரீதியிலான தொழிற்சந்தையின் கேள்விக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதிலும் SLIIT அர்ப்பணிப்புடன் உள்ளது. விருந்தினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பீடங்களின் விரிவுரையாளர்கள் ஆகியோர் ஒன்று கூடி 2025 மார்ச் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியமையானது பெருமை மிக்க மற்றும் சாதனைக்கான மறக்க மடியாத சூழலை உருவாக்கியது. இந்த பட்டதாரிகள் தங்கள் தொழில்முறை பயணங்களை ஆரம்பிக்கும்போது SLIIT இனால் வளர்க்கப்பட்ட அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளை தம்முடன் எடுத்துச் செல்கின்றனர். அனைத்து பட்டதாரிகளும் தங்கள் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்குமாறு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், தங்கள் துறைகளுக்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.

Comments
0

MOST READ