வடக்கு
யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம்

Apr 3, 2025 - 03:17 PM -

0

யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம்

பட்டலந்த வதைமுகாம் விவாகாரத்தை தூசு தட்டும் இன்றைய அநுர தலைமையிலான அரசு அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்று சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் திருஞானசம்பந்தன் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம். நாட்டில் உச்ச பேசுபொருளாக இருந்துவரும் குறித்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் வஜிர அபேவர்த்தன அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப அது ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருந்தது என்று தெரிவித்தார்.

 

சோசலிசத்துக்காக போராடும் வேலைத்திட்டங்களுக்கு பிரதேச ரீதியில் வலுச் சேர்க்கும் வகையில் தான் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றோம்.

 

அதேநேரம் அநுரவின் கட்சி ஒரு பாசிசவாதம் கொண்ட கொடூரமான கட்சி. இவர்களும் இராணுவத்தை பாதுகாக்கவே முற்படுகின்றனர்.

 

இதனால் தமிழ் மக்கள் இவர்களிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05