Apr 3, 2025 - 04:45 PM -
0
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இயங்காத பிரஜா சக்தி நிலையங்கள் எமது அரசாங்கத்தின் ஊடாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இன்று (03) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இயங்காமல் இருக்கின்ற பிரஜாசக்தி நிலையங்களை மீண்டும் எமது அரசாங்கத்தின் ஊடாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அமைச்சால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மக்களை கொண்டு சேர்ப்பதற்கு பிரஜா சக்தி நிலையத்தில் உள்ள உத்தியோகத்தர்களும் ஏனைய சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
--