Apr 3, 2025 - 05:39 PM -
0
இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT- MOBITEL இன் துணை நிறுவனமாகத் திகழும் SLT Services (Pvt) Limited (SLT-SERVICES), தேசிய வணிக தொலைபேசி விபரக் கோவையை அறிமுகம் செய்துள்ளது (‘The National Business Directory’ 2024/25 -The Rainbow Pages). அரச கொள்முதல், நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக மேம்படுத்தப்பட்ட பரந்த விபரக்கோவையாக இது அமைந்துள்ளது.
இந்த புதிய வெளியீட்டினை, மெருகேற்றப்பட்ட இணையத்தளம் (www.rainbowpages.lk), Interactive eBook (www.rainbowpages.lk/ebook), அச்சிடப்பட்ட புத்தகம் (அச்சுப்பிரதி), 24/7 அழைப்பு நிலைய சேவைகள் (SLT 1212 டயல் செய்யவும் அல்லது மொபைல் 444). இலங்கையின் ஒரே தேசிய வணிக தொலைபேசிக் கோவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள Rainbow Pages இனால் 10,000 க்கும் அதிகமான தினசரி ஒன்லைன் தேடல்கள் உள்ளடக்கியுள்ளதுடன், 6,000+க்கும் அதிகமான வியாபார பதிவிடல்கள் மற்றும் 170,000+ க்கு அதிகமான சிறுவிளம்பரங்கள் மற்றும் பரந்தளவு பொருளாதார பிரிவுகளில் வகைப்படுத்தப்படாத பதிவிடல்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் வணக்கத்தலங்கள் போன்ற பல அடங்கியுள்ளன.
வியாபாரங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு சக்தி வாய்ந்த சாதனமாக அமைந்துள்ளமை: 2024/25 தொலைபேசி விபரக்கோவை, நம்பிக்கையை வென்ற வியாபார வழிகாட்டியாக அமைந்துள்ளதுடன், உறுதி செய்யப்பட்ட தொடர்பாடல் தகவல்களையும், ஹாட்வெயார், நிர்மாணம், மின்சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் போன்றவற்றுக்கான துரித தேடல் பொறிமுறையாக அமைந்துள்ளது. பட்டியலிடப்பட்ட வியாபாரங்கள் குறிப்பாக B2B நிறுவனங்கள் மற்றும் MSMBs போன்றன Search Engine Optimization (SEO) அனுகூலங்களை பெறுவதுடன், Google போன்ற சர்வதேச தேடல் தளங்களில் உயர்ந்தளவு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கும்.
அரசாங்கத்தின் கொள்முதல் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளல்: திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், The Rainbow Pages இல் பதிவு செய்து கொண்டுள்ள வியாபாரங்கள் அரசாங்கத்தின் விலைமனு கோரல்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதி பெற்றவையாக திகழும். அதனூடாக, விற்பனையாளர்களுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் ஏற்படும்.
தொடர்ச்சியான வளர்ச்சியுடன் டிஜிட்டலுக்கு முதலிட வழிமுறை: அதன் 2023 ஆண்டுக்கான வெளியீட்டை தொடர்ந்து, SLT-SERVICES டிஜிட்டல் மற்றும் ஒன்லைன் அப்ளிகேஷன்களுக்கு விஸ்தரிப்பை மேற்கொண்டுள்ளது. கடந்த கால விளம்பரதாரர்களில் 80% ஆனவர்கள் 2024/25 வெளியீட்டிலும் தொடர்கின்றனர். நீண்ட கால நோக்கின் அங்கமாக, SLT- SERVICES இனால் தற்போது Digital Marketing & SEO, Content Creation, Web Development, Software solutions & Business Directory Advertising மற்றும் Branding Solutions போன்றன வழங்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் SLT-SERVICES இனால் அதிகளவு கட்டமைப்பு அடிப்படையிலான தீர்வுகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக இலங்கையில் வியாபாரங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்க எதிர்பார்க்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு, visit www.rainbowpages.lk ஐ பார்க்கவும் அல்லது தொடர்புகளுக்கு 0112 399 399.