Apr 4, 2025 - 10:35 AM -
0
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 169 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 39 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆர்சிபி வீரர் விராட் கோலி பீல்டிங் செய்யும் போது கையில் காயம் ஏற்பட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 12 ஆவது ஓவரில் விராட் கோலி பவுண்டரியை தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பந்து தாக்கியதில் விராட் கோலி விரலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.
இதனையடுத்து ஆர்சிபி அணியின் பிசியோ உடனடியாக வந்து வலி நிவாரண சிகிச்சை செய்தனர். விராட் கோலியின் காயம் பெரிதாக உள்ளதாவும், அவர் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை எனவும் தகவல் பரவின.
இந்நிலையில், கோலியின் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் முக்கிய அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் 'விராட் கோலி நலனுடன் இருக்கிறார். எல்லாம் சரியாகி விட்டது என்று ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.