Apr 4, 2025 - 11:49 AM -
0
இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்த மானது தான். ஆனால் ஒரு பறவையின் கூட்டுக்குள் வேறொரு இன பறவை அல்லது விலங்கு செல்லும் போது சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதே போல நம்முடைய வீட்டில் சில விலங்குகள் அல்லது பறவைகள் வளர்க்க ஏதுவானதாக இருக்கும்.
அதைத் தாண்டி சில பறவைகள் அல்லது விலங்குகள் நம் வீட்டிற்கு வரும் போது சில பிரச்னைகள் ஏற்படுகிறது. அப்படி எந்தெந்த விலங்குகள், பறவைகள் வந்தால் வீட்டிற்கு அதிர்ஷ்டம், பிரச்னை தரும் என தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் வழிபடக்கூடிய கடவுள்கள், தெய்வங்கள் தங்களின் வாகனமாக விலங்குகளையும், கோவில்களில் தல விருட்சமாக சில மரங்களும் குறிப்பிடப்படுகிறது. இதன் பின்னால் சில இயற்கை பேணும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. விலங்குகள், பறவைகள், மரங்களைக் காக்கும் பொருட்டு இது போன்ற விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன.
எல்லா விலங்குகள் அல்லது பறவைகள் மனித இனத்துடன் ஒன்றி பழகக்கூடியன அல்ல. அல்லது மனித செயல்பாடுகளுக்கு பாதிக்கப்படக்கூடியதாக அவை இருக்கும்.
வாஸ்து முறைப்படி வீட்டிற்குள் எந்த விலங்குகள் மற்றும் பறவைகள் வருவது சுபமானதாகவும், அசுபமானதாகவும் கருதப்படும் என தெரிந்து கொள்வோம்.
வீட்டிற்கு கிளி வருவதும், அதன் சத்தமும் மிகவும் நல்ல சகுனம் என கருதப்படுகிறது. இது வணிக வளர்ச்சிக்கு உதவும். உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும். அன்னை மீனாட்சி, ஆண்டாள் நாச்சியாரின் அங்கமாக கிளி இருக்கிறது.
வாஸ்து நிபுணர்களின் கருத்துப் படி வீட்டில் மயில் வருவது மிகவும் சுபமாக கருதப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் வீட்டில் அல்லது வீட்டுப் பகுதியில் வந்தால் வீட்டின் பிரச்சினைகள், இன்னல்கள் விலகும். உங்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
வீட்டில் கருப்பு எறும்பு வருவது மிகவும் மங்களகரமானதாக, நல்லது என கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பண ஆதாயம் பெருகும் வாய்ப்புகள் உருவாகும்.புதிய வேலை வாய்ப்புகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் புறாக்களின் வருகை சுபமானதாக கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை எழுப்பக்கூடிய சப்தம், அது பரப்பக்கூடிய தூசி உள்ளிட்டவை நமக்கு எதிர்மறையான சூழலை உருவாக்குகிறது. அதனால் வீட்டில் புறா வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
நம்முடைய வீட்டிற்கு வவ்வால்கள் வருவது சுபமாக கருதப்படுவதில்லை. அதனால் எதிர்மறையான சூழல் வீட்டில் உருவாகும். அதோடு அவை நோய் பரப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.