Apr 4, 2025 - 01:01 PM -
0
பிரிட்டிஷ் கவுன்சில், HSBC வங்கிமற்றும்கல்விஅமைச்சுடன்இணைந்து, கிராமியப் பிரதேசங்களுக்கான ஆங்கிலத் தொடர்புத்திறன்கள் 2025 [English Communication Skills for Remote Delivery Project (ECSRD) 2025] திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமையை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 24 திங்கள் அன்று விருது வழங்கும் நிகழ்வினை நடத்தியது.
இந்நிகழ்வில் 300 க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் கலந்து கொண்டதுடன் மேலும் நாடளாவிய ரீதியில் 279 ஆசிரியர்களுக்கும் பிராந்திய ஆங்கில ஆதரவு மையங்களின் (RESCs) 51 வழிகாட்டிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ECSRD திட்டமானது இலங்கையில் குறிப்பாக கிராமப்புறங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் ஆங்கிலமொழிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த முயற்சியானது ஆசிரியர்களின் செவிமடுக்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்தி மதிப்பிடும் திறனை வலுப்படுத்துவதுடன் இதன் இறுதியில் மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில் அபிலாஷைகளுக்கு ஆதரவினை வழங்குகிறது. இந்ததிட்டமானது இடைநிலைக் கல்வி ஆங்கிலமொழி ஆசிரியர்களுக்கு அவர்களின் வகுப்பறை நடைமுறைகளின்போது பேசும் மற்றும் கேட்கும் செயல்பாடுகளை எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைப்பது என்பது குறித்த நடைமுறைப்பயிற்சியை வழங்கியது. இந்த திறன்களை வளர்ப்பதற்கு ஆங்கிலமொழி பாடசாலை பாடப் புத்தகங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கான யுக்திகளையும் அது அவர்களுக்கு வழங்கியது.
29 பிராந்திய ஆங்கில ஆதரவு மையங்களின் (RESCs) வழிகாட்டிகளால் ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டது, அவர்கள் ஒன்பது மாத திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர். அவர்கள் தங்கள் பிரதேசத்திற்குரிய உள்ளூர் ஆங்கில ஆதரவு மையங்களின் ஆய்வுஅமர்வுகளில் கலந்து கொண்டனர். அத்துடன் அவர்கள் கற்றல் உபகரணங்களை இணைக்கும் விதத்திலான வகுப்பறை கற்பித்தலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலிருந்தும் 31 ஆங்கில ஆதரவு மையங்களில் இருந்து 66 வழிகாட்டிகள் ஆசிரியர் பங்கேற்பாளர்களுக்கு தேவையான ஆதரவு வழிகாட்டல்களை வழங்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 501 ஆங்கில மொழி ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களின் கேட்கும் மற்றும் பேசும் திறனை மேம்படுத்தி மதிப்பிடுவதற்கான சிறப்புப் பயிற்சியை பெற்றுள்ளனர்.
இலங்கையின் கல்விஅமைச்சின் கல்விப்பணிப்பாளர் (ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்) நிமாலி பதுரலிய இது தொடர்பாக தெரிவிக்கையில் : “இந்தத் திட்டம் இடைநிலைப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களின் கேட்கும் மற்றும் பேசும் திறனை மதிப்பிடும் திறனை மேம்படுத்த உதவியது. இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் பயனடைந்துள்ளனர். அத்துடன் ஆசிரியர்களின் மேம்படுத்தப்பட்ட அறிவானது மாணவர்களின் கேட்கும் மற்றும் பேசும் திறனை மேம்படுத்த உதவும்” என்றார்.
இந்ததிட்டத்தின்தனிச்சிறப்புஎன்னவென்றால், இது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆசிரியர் ஆதரவுமையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இங்கு பணிபுரியும் பயிற்சியாளர்கள் வழிகாட்டிகளாகவும் திறன்களைப் பெற்றுள்ளனர். இதேவேளை இந்ததிட்டமானது தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை செவிமடுத்தல் மற்றும் பேசும்திறன்களை வளர்ப்பதிலும் மற்றும் மதிப்பிடுவதிலும் ஆசிரியர்களின் திறன்களை வலுப்படுத்தியுள்ளது, என்று அவர் மேலும் கூறினார்.
பிரிட்டிஷ்கவுன்சிலுடன் ஆசிரியர் திறன்மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கு HSBC வங்கி எடுத்துள்ள இந்த முன்முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது, இந்ததிட்டத்தின் இறுதிப் பயனாளிகள் மாணவர்களே ஆவர். ஏனெனில் ஆங்கிலத் தகவல் தொடர்புக்கு அடிப்படையான, கேட்கும் மற்றும் பேசும்திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இதன்மூலம் மாணவர்களே பெறுகின்றனர் ,” என்று பதுரலிய கூறினார்.
HSBC ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Surgenor தெரிவிக்கையில், “கல்வியே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என நாங்கள் நம்புகிறோம், மேலும் ஆங்கிலமொழியானது வலுவூட்டலுக்கான சக்திவாய்ந்த கருவியாகும்.
பிரிட்டிஷ்கவுன்சில் மற்றும் கல்விஅமைச்சுடனான எங்கள் கூட்டாண்மை மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலமொழித் திறனை மேம்படுத்தி, மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் அளிக்கும் வாய்ப்பினை பெற்றதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
கல்வியாளர்களை சரியான வழிகாட்டலுடன் சித்தப்படுத்துவதன்மூலம், அடுத்த தலைமுறையினர் தங்கள் வேலைவாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதையும் திறமைக்கான உலகளாவிய சந்தையில் செழிக்கத் தேவையான மொழித்திறனைப் பெற்றுக்கொள்வதையும் நாங்கள் உறுதி செய்கிறோம், என்று அவர் மேலும் கூறினார். இந்த முன்முயற்சியானது நமது சமூகங்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குமான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பிரிட்டிஷ்கவுன்சில் ஸ்ரீலங்காவின் வதிவிடப்பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ், இம்முயற்சியின் வெற்றி குறித்து கருத்துத்தெரிவிக்கையில், பிரிட்டிஷ்கவுன்சில், HSBC மற்றும் கல்விஅமைச்சுடன் இணைந்து, ECSRD திட்டத்தின் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தமைக்கு பெருமிதம் கொள்கிறது.
மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் மதிப்பீட்டு திறன்களுடன் வழிகாட்டிகளை சித்தப்படுத்துவதன்மூலம், தரமான ஆங்கில கற்பித்தலை, குறிப்பாக கிராமப்புறங்களில் நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த முன்முயற்சியானது இலங்கையின் பரந்தகல்வி இலக்குகளுடன் இணங்குகிறது, நாங்கள் அறிமுகப்படுத்தும் வழிமுறைகள் பொருத்தமானவை, நிலையானவை மற்றும் அளவிடக்கூடியவை என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்றைய விருது வழங்கும் விழா ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல – இது இலங்கையில் வலுவான, அதிக நம்பிக்கை கொண்ட ஆங்கில ஆசிரியர் சமூகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.