Apr 4, 2025 - 02:25 PM -
0
புகழ்பெற்ற நடிகர் ரவிக்குமார் (75) சென்னையில் இன்று காலமானார்.
இந்தியாவின் கேரளத்தின் திரிச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார் சென்னை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04) காலை 10 மணியளவில் காலமானார்.
இவர், நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.