வணிகம்
Pelwatte Kiri Ithirena Miliyanayak நம்பிக்கைக்கு வெகுமதியளித்து, இலங்கைக்கு ஆதரவளிக்கின்றது

Apr 4, 2025 - 03:04 PM -

0

Pelwatte Kiri Ithirena Miliyanayak நம்பிக்கைக்கு வெகுமதியளித்து, இலங்கைக்கு ஆதரவளிக்கின்றது

இலங்கையில் முன்னணி வகிக்கின்ற, 100% உள்நாட்டு பாற்பொருள் வர்த்தகநாமமான Pelwatte Dairy Industries Ltd, தான் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்த “Pelwatte Kiri Ithirena Miliyanayak” என்ற நுகர்வோர் ஊக்குவிப்பின் மாபெரும் இறுதி நிகழ்வைக் கொண்டாடியுள்ளதுடன், இது தொடர்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றும், பரிசு வழங்கும் வைபவமும் 2025 ஏப்ரல் 2 அன்று BMICH ல் இடம்பெற்றன. 

இரு மாதங்களாக இடம்பெற்ற இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் போது, பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக 400 கிராம் Pelwatte முழு ஆடைப் பால்மாவின் இரு வெற்றுப் பக்கட்டுக்களை தமது தொடர்பு விபரங்களுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு மகத்தான வரவேற்புக் கிட்டியதுடன், நாடெங்கிலுமிருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றியுள்ளனர். 

வாரந்தோறும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு, ரூபா 100,000 தொகையை பணப்பரிசாகப் பெற்றுக்கொண்டதுடன், ரூபா 1,000,000 தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் பரிசின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் போது அதில் இடம்பெறும் வாய்ப்பினையும் பெற்றுக்கொண்டனர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெற்றியாளர்கள் வலம்வந்துள்ளமை, நாடளவியரீதியில் இல்லங்கள் மத்தியில் Pelwatte ஆழமாகப் பிணைந்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 

வாராந்தம் தெரிவு செய்யப்பட்ட எட்டு வெற்றியாளர்களில் இடம்பெற்றுள்ளவர்கள்: எச்.எச்.டி. குணவர்த்தன - பிட்டபெத்தர, ஏ.ஜி. இனோகா நெலும் குமாரி - கண்டி, ஐ. சந்தியா மல்காந்தி - வாதுர, ஏ. மல்லிகா கம்லக்ஷா - பாணந்துறை, திமானி சத்துரிகா - காலி, தீபிகா குமுதினி - வாதுவை, டி.ஆர்.சி. விஜேமான்ன - ஹொறணை மற்றும் எம். ஸ்டீஃபன் - மாகொல. Pelwatte முகாமைத்துவ அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் முன்னிலையில் காலியைச் சேர்ந்த டி.எல். லதா அவர்கள் மாபெரும் பரிசான ரூபா 1 மில்லியன் தொகையைப் பெற்றுக்கொண்டார். 

Pelwatte Dairy Industries Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்கிரமநாயக்க அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இந்த ஊக்குவிப்புப் பிரச்சாரமானது வெறுமனே பரிசுகளை வழங்குவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இது எமது வாடிக்கையாளர்களைப் போற்றிக் கொண்டாடி, எப்போதும் தரத்தையே வழங்குவோம் என்ற எமது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தி, இலங்கை சமூகத்துடன் தோளோடு தோள் நிற்கும் ஒரு முயற்சியாகும். 100% உள்நாட்டு நிறுவனம் என்ற ரீதியில், Pelwatte தொடர்ந்தும் எமது பாலுற்பத்தியாளர்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்,” என்று குறிப்பிட்டார். 

நிலைபேற்றியல், நெறிமுறை சார்ந்த பண்ணை நடைமுறை, மற்றும் தூய நலச்செழுமையை வழங்குதல் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள உண்மையான அர்ப்பணிப்பின் காரணமாக எண்ணுக்கணக்கற்ற இலங்கைக் குடும்பங்களின் நம்பிக்கையையும், நேசத்தையும் Pelwatte Dairy சம்பாதித்துள்ளது. 2006 ம் ஆண்டில் தனது பயணத்தை ஆரம்பித்தது முதற்கொண்டு, உற்பத்தியின் ஒவ்வொரு படிமுறையிலும் அக்கறை, தரம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணம், பல்வகைப்பட்ட பாற்பொருள் தயாரிப்புக்களை வழங்கி, அனைத்து இல்லங்களிலும் அபிமானம் பெற்றுள்ள நாமமாக இது மாறியுள்ளது. ஒவ்வொரு தயாரிப்பின் மூலமாகவும் தேசத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கி, உள்ளுர் சமூகங்களுக்கு ஆதரவளித்து மற்றும் தன்னிறைவு கொண்ட தேசமாக இலங்கையை வளர்ச்சி காணச் செய்வதற்கு Pelwatte தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Comments
0

MOST READ